

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் பிடிபட்ட 3 இளைஞர்களிடம், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கொச்சியில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வர்கள் என்று கூறி 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். அவர்களில், கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபு பஷீர் (எ) ரஷீத்(26) என்பவரும் ஒருவர். அவரிடம் விசாரணை நடத்தியதில், மேலும் சிலருக்கு ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 21 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அவர்களில் 3 பேரை கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத் துக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து, 3 பேரும் கொச்சி சென்றனர். அவர் களிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் தொடர்பு?
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “கேரளாவில் கைது செய்யப்பட்ட அபு பஷீரிடம் முகநூலில் உரையாடியது குறித்து 3 இளைஞர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது. மேலும், அவர் கள் சிரியாவில் யாரையாவது தொடர்புகொண்டு பேசினார்களா என்றும் விசாரிக்கப்படுகிறது.
கேரளாவில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரிகள் கூறும் தகவலின் அடிப் படையிலும், கோவை இளைஞர் களிடம் விசாரணை நடத்தப்படு கிறது. விசாரணைக்குப் பின்னரே, மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.