சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம்

சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம்
Updated on
1 min read

சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சி காரணமாக சென்னை - ராஜரத்தினம் அரங்கம் அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

எழும்பூர் - ராஜரத்தினம் அரங்கத்தில், நாளை காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு காவல் துறையினருக்குக் குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழா நடைபெறுகிறது. எனவே, ராஜரத்தினம் அரங்கம் அருகில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது என போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம்:

ருக்குமணி இலட்சுமிபதி சாலையில் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி நிறைவுறும் வரையிலும் இராஜரத்தினம் அரங்கில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களின் வாகனங்களைத் தவிரப் பிற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

பாந்தியன் சாலையிலிருந்து ருக்குமணி இலட்சுமிபதி சாலை வழியாக எஸ்கார்ட் பாய்ண்ட் செல்லவேண்டிய வாகனங்கள் பாந்தியன் சாலை ரவுண்டானாவிலிருந்து பாந்தியன் மேம்பாலம் வழியாகச் சென்று கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாக அவர்கள் செல்லவேண்டிய பகுதிகளை அடையலாம்.

எத்திராஜ் சாலை ருக்குமணி இலட்சுமிபதி சாலை சந்திப்பிலிருந்து (எஸ்கார்ட் பாய்ண்ட்) பாந்தியன் இரவுண்ட்டான நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் மேற்படிச் சந்திப்பிலிருந்து கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாகப் பாந்தியன் சாலையினை அடையலாம்.

பாந்தியன் சாலை மாண்டியத் சாலைச் சந்திப்பிலிருந்து ருக்குமணி இலட்சுமிபதி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சந்திப்பிலிருந்து (மியூசியம் அருகில்) பாந்தியன் சாலை வழியாக கோ-ஆப்டெக்ஸ் அல்லது பாந்தியன் ரவுண்டானா அடைந்துத் தாங்கள் செல்லவேண்டிய இடத்தினை அடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in