

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து நேற்று முன்தினம் அதிக அளவில் அவதூறு பரவியது. இதைத் தொடர்ந்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜிடம் நேற்று புகார் மனு அளித்தார்.
இதன்பேரில் போலீஸாரின் முதல் கட்ட விசார ணையில், பிரான்ஸ் நாட்டில் இருந்தவாறு முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் அவதூறு பரப்பியது ‘தமிழச்சி’ என்ற புனைபெயர் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.