

சென்னை: சென்னையில் 5 இடங்களில் காற்று தர கண்காணிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.
சென்னையில் முக்கிய பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணிக்க 15 வது நிதிக்குழுவில் மானியம் அளிக்கப்படுகிறது.
இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த செயல் திட்டம் தயாரிக்கப்படுட்டு, சென்னை ஐஐடியுடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் 5 இடங்களில் காற்று தர கண்காணிப்பு மையம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதில் 4 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம், ஒரு இடத்தில் சென்னை மாநகராட்சி மூலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.