சென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்வர் தகவல்

சென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்வர் தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னையில், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு அக்டோபர் மாதம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூலை 29-ம்தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள வங்கப் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி, அதாவது 3,346 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. புலிகள் கணக்கெடுப்பு அடிப்படையில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி புலிகள் எண்ணிக்கை 2,967 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உலக புலிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டட்விட்டர் பதிவில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் 10% புலிகள்

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளன. புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்கு பொருத்தமாக, இந்த ஆண்டு அக்டோபரில் சென்னையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசால் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in