

சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபா மகப்பேறு மருத்துவ மனை உள்ளது. இங்கு பிரசவத் துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த பிருந்தா(30) என்பவருக்கு நேற்று குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க பிருந்தாவின் கணவர் ஜனார்த்தனன் மாலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
குழந்தையை பார்க்கும் ஆசை யில் இருந்த ஜனார்த்தனன், பர்தா அணிந்து கொண்டு, பெண் போல பிரசவ வார்டுக்குள் நுழைந்து விட்டார். குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர் பர்தாவை விலக்கி, குழந்தையை கொஞ்சத் தொடங்கிவிட்டார். பிரசவ வார்டுக்குள் ஓர் ஆண் வந்திருப்பதை பார்த்த மற்ற பெண்கள் கூச்சலிடத் தொடங்கி னர். இதைத்தொடர்ந்து அங்கு காவலுக்கு நின்றிருந்த பணி யாளர்கள் அவரைப் பிடித்து மருத்துவமனை காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர். தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மட்டுமே ஜனார்த்தனன் இந்தச் செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. எனவே போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.