Published : 15 Oct 2016 09:10 AM
Last Updated : 15 Oct 2016 09:10 AM

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு மாணவிகளின் சடலங்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு: தோழிகள் திரண்டு கண்ணீர் அஞ்சலி

கிண்டியில் தண்ணீர் லாரி மோதி பலியான மாணவிகளின் பிரேதப் பரிசோதனை நேற்று நடந்தது. பின்னர், அவர்களது பெற்றோரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சித்ரா, ஆஷா ஸ்ருதி, காயத்ரி ஆகியோர் நேற்று முன்தினம் உடல் நசுங்கி இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் சடலங்கள் நேற்று முன்தினம் மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டன. உடனடியாக பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை.

நேற்று காலை 10 மணி முதல் 12.45 மணிவரை பிரேதப் பரிசோதனை நடந்தது. பின்னர், மாணவிகளின் சடலங்கள் வெள்ளை துணியால் சுற்றப்பட்டு பெற்றோரிடம் ஒப் படைக்கப்பட்டன. இதைக் கண்டு அவர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். பின்னர், மாணவிகளின் சடலங்கள் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இறந்து போன மாணவிகளின் வீடுகளுக்கு அவர்களது தோழிகளும் சக மாணவிகளும் திரண்டு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x