

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம் மேட்டுத் திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் கணேசன்(53). இவரது மைத்துனர் ராஜலிங்கம்(53). கணேசனின் 13 வயது மகள், 8-ம் வகுப்பு படித்து வந்தார். கணேசனும், ராஜலிங்கமும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அச்சிறுமி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து கணேசன், ராஜலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய் தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப் பளித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கணேசனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், ராஜலிங்கத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.