

திமுக தலைவர் கருணாநிதி குறித்து முகநூலில் வதந்தி பரப்பியதாக பெண் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலூர் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் தேவகுமார் என்பவர் நேற்று காலை வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். வேலூரைச் சேர்ந்த சவிதா என்ற பெண், முகநூல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தவறாகப் பதிவு செய்துள்ளார். தவறான தகவலை முகநூல் பக்கத்தில் பதிவு செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து கருணாநிதி உடல்நிலை குறித்து உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்ட தாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த சவிதா என்ற பெண் மீது வாணியம்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள