75-வது சுதந்திர தினம்: 17 லட்சம் வீடுகள், முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி திட்டம்

75-வது சுதந்திர தினம்: 17 லட்சம் வீடுகள், முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி திட்டம்
Updated on
1 min read

சென்னை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 லட்சம் வீடுகள் மற்றும் முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுளளது. இதை செயல்படுத்துவது தொடர்பாக 27-ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இதன்படி சென்னை மாநாகராட்சியில் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப்சிங்பேடி, நிலைக் குழுத் தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் விவரம்:

  • சென்னையில் உள்ள 17 லட்சம் குடியிருப்புகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்.
  • அனைத்து வணிக நிறுவனங்களிலும் தேசிடியக் கொடி ஏற்ற வேண்டும்
  • அனைத்து கடைகளிலும் தேசியக் கொடி விற்பனை செய்ய வேண்டும்.
  • சுய உதவிக் குழுக்கள் மூலம் தேசியக் கொடி தயாரிக்கலாம்.
  • முக்கிய சாலைகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in