சென்னை விடுதிகளில் தங்குமிடம், உணவுடன் வை-ஃபை வசதி: மாணவர்கள், பணிபுரிவோர் மத்தியில் வரவேற்பு

சென்னை விடுதிகளில் தங்குமிடம், உணவுடன் வை-ஃபை வசதி: மாணவர்கள், பணிபுரிவோர் மத்தியில் வரவேற்பு
Updated on
1 min read

சென்னையில் உள்ள விடுதி களில் தங்குமிடம், உணவுடன் சேர்த்து தற்போது புதிதாக வை-ஃபை வசதியும் செய்து தரப்படுகிறது. இது மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என்று விடுதிகளில் தங்குவோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதை பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும் பாலானோர் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்து கின்றனர். அதற்காக அதிக நேரத் தைச் செலவிடுகின்றனர். அந் தளவுக்கு சமூக வலைத்தளம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இண்டர்நெட் வசதி இருந்தால் ஒருவர் மட்டுமே சமூக வலைத் தளத்தை பார்க்க முடியும். அதேநேரத்தில் வை - ஃபை வசதி இருந்தால் ஒரேநேரத்தில் ஏராளமானோர் சமூக வலைத் தளத்தைப் பார்க்கலாம். இதன் காரணமாக முன்பு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் வை-ஃபை வசதி இருந்தது.

அண்மையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் அதிவேக வை - ஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் வை-ஃபை வசதி செய்து தரும் போக்கு அதிகரித் துள்ளது.

குறிப்பாக மாணவ, மாணவிகள், பணிபுரிவோர் தங்கும் விடுதிகளில் வை - ஃபை வசதி செய்து கொடுக்கப்பட் டுள்ளது.

நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில் உள்ள பணிபுரியும் ஆண்களுக்கான தங்கும் விடுதியில் வை - ஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தங்குமிடம், உணவுடன், வை - ஃபை வசதியையும் சேர்த்து மாதத்துக்கு ரூ.4 ஆயிரத்து 500 வசூலிக்கின்றனர். இதுபோல ராமாபுரத்தில் உள்ள பணிபுரியும் பெண்களுக்கான விடுதியிலும் வை - ஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது.

24 மணிநேரம்

இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த பொறியாளர் அருண் சுபாஷ் கூறும்போது, “நான் தங்கியிருக்கும் நந்தம்பாக்கம் விடுதியில் தங்குமிடம், உணவுடன், வை-பை வசதியும் உள்ளது.

முன்பெல்லாம் செல்போனில் இண்டர்நெட் சேவைக்காக தனியாக செலவு செய்தேன். இந்த விடுதிக்கு வந்த பிறகு அந்த செலவு எனக்கு மீதமாகிறது. இங்குள்ள வை - ஃபையை 24 மணி நேரம் பயன்படுத்துவது எனக்கு தனிப்பட்ட முறையிலும், அலுவலக ரீதியாகவும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in