சென்னை செஸ் ஒலிம்பியாட் விழா: சதுரங்க கரை வேட்டியில் பிரதமர் மோடி, பாஜகவினர்

சென்னை செஸ் ஒலிம்பியாட் விழா: சதுரங்க கரை வேட்டியில் பிரதமர் மோடி, பாஜகவினர்

Published on

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்துள்ள பிரதமர் சதுரங்க கரை வேட்டி அணிந்து வந்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்கவிழா நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறு்பபினர்கள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கத்திற்குச் சென்றார்.

சதுரங்க கரை வேட்டி: இந்த விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் மோடி, சதுரங்க கரை வேட்டி, சட்டை அணிந்து வந்தார்.

பாஜகவினரின் சதுரங்க கரை வேட்டி: விழாவை தொடங்கி வைக்க வருகை தந்துள்ள பிரதமர் மோடி மட்டுமின்றி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் சதுரங்க கரை வேட்டி அணிந்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in