மோடி வருகை: கிண்டி பகுதிகளில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு

மோடி வருகை: கிண்டி பகுதிகளில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதன் காரணமாக நாளை சென்னை - கிண்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அண்ணா பல்கழைகழகத்தில் நாளை நடைப்பெறும் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதன் காரணமாக சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் காலை நேரங்களில், குறிப்பாக காந்தி மண்டபம் சாலை, காண்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் சென்னை விமான நிலையம் வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே, விமான நிலையம் செல்வோர் மற்றும் வாகன ஒட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in