

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று கூறியது: தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. நேரடி விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள், மழை பொய்த்ததால் விதைகள் முளைப்புத் தன்மை இழந்து பாதிக் கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், குறைந்த அளவு தண்ணீரே வருவதால் பாசனப் பகுதிகளை சென்றடையவில்லை.
எனவே, தமிழகத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.