Last Updated : 28 Jul, 2022 02:40 PM

 

Published : 28 Jul 2022 02:40 PM
Last Updated : 28 Jul 2022 02:40 PM

“விழுப்புரம் சட்டம் - ஒழுங்கு நிலையை நேரில் காண வருக” - டிஜிபிக்கு ரூ.500 ’பயணப்படி’ அனுப்பிய இளைஞர்

பயணப்படி அனுப்பியதற்கான மணி ஆர்டர் ரசீது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வளவனூர், குமாரகுப்பத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோருக்கு ரூ.500 மணியாடர் அனுப்பியுள்ளார்.

மேலும், அவர் அனுப்பிய கடிதத்தில், ''விழுப்புரத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கட்டிடங்களில் உள்ள சுவர்களில் விளம்பர வாசகங்கள் எழுதுவது, விளம்பர பேனர்கள் வைப்பது என விதி மீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

எனவே, இவற்றை நேரில் வந்து பார்ப்பது பயணப்படியாக ரூ.500 அனுப்பியுள்ளேன். இத்தொகைக்கு சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x