செஸ் ஒலிம்பியாட் சிறப்பாக நடைபெற பல்வேறு மாநில முதல்வர்கள் வாழ்த்து 

செஸ் ஒலிம்பியாட் சிறப்பாக நடைபெற பல்வேறு மாநில முதல்வர்கள் வாழ்த்து 
Updated on
1 min read

சென்னை: செஸ் ஒலிம்பியாட் சிறப்பாக நடைபெற பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

இதில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழக முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in