Published : 28 Jul 2022 12:48 PM
Last Updated : 28 Jul 2022 12:48 PM

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு: 8 மாத கர்ப்பிணி வீராங்கனைக்கு மகப்பேறு மருத்துவர் நியமனம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 மாத கர்ப்பிணி வீராங்கனைக்கு தனியாக மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட்டுளளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வந்திருக்கக்கூடிய 2000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டள்ளது.

இவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால் இரண்டு லட்சம் வரையில் காப்பீட்டு திட்டம் உள்ள 13 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் மாமல்லபுரத்தில் 1000 மருத்துவப் பணியாளர்கள் 30 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. இந்தியா சார்பில் 8 மாத கப்ர்பிணி வீராங்கனை ஒருவர் செஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். அவருக்காக தனியாக மகப்பேறு மருத்துவர் தமிழக மருத்துவத் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x