

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாலை 5 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா 7 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதன்படி நேரு உள் விளையாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சியில் பங்கு பெறவுள்ள 900 பேருக்கு கரோனா சோதனை எடுக்கப்பட்டது. இதில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 4 நடன கலைஞர்களும் மேத்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.