

சென்னை: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:
ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட்டு, அதில் குறைபாடு கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும்.
பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும். தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகேஉள்ள வேறு பள்ளிக்கு மாற்றவேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிவைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.