வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் சில இடங்களில் மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் சில இடங்களில் மழை வாய்ப்பு
Updated on
1 min read

வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் ''வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in