லாக்கருடன் ரூ.8 லட்சம் திருடிய 2 பேர் சிக்கினர்

லாக்கருடன் ரூ.8 லட்சம் திருடிய 2 பேர் சிக்கினர்
Updated on
1 min read

சென்னை புரசைவாக்கம் பிரிக் ளின் 4-வது பிளாக் அரிஹந்த் வைகுந்த் அடுக்குமாடி குடி யிருப்பில் வசிப்பவர் லலித் குமார் (45). சவுகார்பேட்டை ஜெனரல் முத்தையா தெருவில் மின் சாதன பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி காலை கடையை திறக்க வந்தபோது, மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து கடையில் இரும்பு லாக்கரில் வைத்திருந்த ரூ.8 லட்சத்துடன் இரும்பு லாக்கரை தூக்கிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து லலித்குமார் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இக்கடைக்கு குடிநீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர் களான ரமேஷ் குமாவத்(37) மற்றும் நாதுராம்(28) ஆகி யோர் மீது சந்தேகம் எழுந் தது. இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடைக்கு குடிநீர் சப்ளை செய்ய செல்லும்போது, லலித் குமாரின் கடையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததைக் கண்டு பணத்தை கொள்ளைடியக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்பேரில் கடந்த 30-ம் தேதி இருவரும் சேர்ந்து லலித்குமார் கடையின் பூட்டை உடைத்து லாக்கரை திறக்க முயன்றுள்ளனர். அதை திறக்க முடியாததால் பணத்துடன் இரும்பு லாக்கரை தூக்கிக் கொண்டு சென்று, மறைவான இடத்தில் வைத்து இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, இரும்பு லாக்கரை ரெட்டை ஏரியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ரெட்டை ஏரியில் வீசிவிட்டுச் சென்ற இரும்பு லாக்கரும் ஏரியிலிருந்து கைப் பற்றப்பட்டது. கைது செய் யப்பட்ட இருவரும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in