Published : 27 Jul 2022 07:44 AM
Last Updated : 27 Jul 2022 07:44 AM

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவரை கண்டறியும் செயலி: இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

சென்னை

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களைக் கண்டறிய ‘Search for doctor App' என்ற செயலியை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகப்படுத்தி உள்ளது. அஞ்சல் குறியீட்டு எண், பகுதியை வைத்து தேடினால்அப்பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். இதன்மூலம் பொதுமக்கள் அவசர காலங்களில் மருத்துவர்களை எளிதில் கண்டறிய முடியும்.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இதுபோன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் 1.60 லட்சம் பேர் உள்ளனர். இந்த செயலியில் தற்போது 80 ஆயிரம் மருத்துவர்கள் இணைந்துள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் கே.செந்தில் கூறும்போது, “கரோனா காலகட்டத்தில் நிறைய போலி மருத்துவர்கள் உருவாகினர். இந்த செயலி மூலம், கவுன்சிலில் பதிவு செய்துள்ள அனுபவம் வாய்ந்த சரியான மருத்துவர்களிடம் மக்கள் சிகிச்சை பெறுவதை உறுதிசெய்ய முடியும். மருந்துகளை பரிந்துரைக்கும் செயலி,மருத்துவச் சான்றிதழ் பெறும் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தகவல்களைப் பாதுகாக்கும்வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x