

கோவையில் இந்து முன்னணி நிர் வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கடந்த 18-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத் தினம் மைதானம் அருகில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப் பாட்டத்துக்கு காவல்துறை அனு மதி அளிக்கவில்லை. ஆனாலும் காலை 9.30 மணி முதலே அங்கு பாஜக தொண்டர்கள் திரள ஆரம் பித்தனர்.
காலை 10.30 மணிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 1,000-க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், “ஆர்ப்பாட்டத் துக்கு அனுமதி இல்லை. எனவே, அமைதியாக கலைந்து செல்லுங் கள். இல்லையெனில் கைது செய் வோம்” எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழிசை, எச்.ராஜா ஆகியோர் காவல் துறை அதிகாரி களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக தொண்டர்கள் “கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், கோவையில் கைதான இந்து இயக்க நிர்வாகிகளை விடு தலை செய்ய வேண்டும்” என கோஷமிட்டனர். பலர் சாலையின் நடுவே படுத்துக்கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீ ஸார் 700 பேரை கைது செய்து 5 பஸ்கள் மற்றும் காவல்துறை வேன்களில் அழைத்துச் சென்றனர். அவர்களை நுங்கம்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் மண்டபங்களில் தங்க வைத்தனர்.
முன்னதாக செய்தியாளர் களிடம் தமிழிசை கூறியதாவது:
தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்கள் கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த வழக்குகளில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. ஜனநாயக முறையில் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கக்கூட காவல்துறை அனுமதிக்க மறுக்கிறது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ராஜரத் தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட் டம் நடத்த அனுமதி தந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அனு மதி இல்லை என்கிறார்கள். காவல் துறையினர் வேண்டுமென்றே எங்களை அலைக்கழிக்கின்றனர். இது கண்டனத்துக்குரியது
இவ்வாறு தமிழிசை கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடு விக்கப்பட்டனர்.
திடீர் மறியல்
இந்நிலையில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, ‘நாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இடத்துக் குள் நுழைந்த 4 பேர், எங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அவர்களை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும்’ என்று கூறினர். மறியலில் ஈடுபட்ட வர்களிடம் போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறு கையில், ‘பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீசப்படவில்லை. மர்ம நபர்கள் யாரும் உள்ளே நுழை யவும் இல்லை. சந்தேகத்தின் பேரில், 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.