ஊழல் புகாரில் சிக்கியதால் நடவடிக்கை: போக்குவரத்து துறை துணை ஆணையர் இடைநீக்கம்

ஊழல் புகாரில் சிக்கியதால் நடவடிக்கை: போக்குவரத்து துறை துணை ஆணையர் இடைநீக்கம்
Updated on
1 min read

சென்னை: ஊழல் புகாரில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ளபோக்குவரத்து துறை அலுவலகத்தில், போக்குவரத்து துணை ஆணையராகப் பணியாற்றியவர் சி.நடராஜன்.

இந்நிலையில், பதவி உயர்வு, பணியிட மாற்றம் கோரும் அலுவலர்களிடம் இருந்து அவர் லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த மார்ச்மாதம் போக்குவரத்து துறைதுணை ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.35 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.

இதற்கிடையே, போக்குவரத்து துணை ஆணையர் சி.நடராஜன், திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் தற்போதுபணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘போக்குவரத்து துணை ஆணையர் (திருநெல்வேலி) சி.நடராஜன் மீதான ஊழல் வழக்கு விசாரணையில் இருப்பதால், அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in