உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தி

உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தி
Updated on
2 min read

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிர ஸுக்கு மிகக் குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சி யின் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர் தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக திருச்சி. சேலம், தூத்துக் குடி மாநகராட்சி மன்ற உறுப்பினர் களுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது.

65 வார்டுகள் கொண்ட திருச்சி மாநகராட்சியில் 14, 37, 44 ஆகிய 3 வார்டுகள், 60 வார்டுகள் கொண்ட சேலம் மாநகராட்சியில் 8,9,16,17, 36 ஆகிய 5 வார்டுகள், 60 வார்டு கள் கொண்ட தூத்துக்குடி மாநக ராட்சியில் 6, 25, 35, 39, 50, 59, 59 ஆகிய 7 வார்டுகள் மட்டுமே காங் கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை மாநகராட்சிகளில் 10 சதவீத இடங்கள் சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சா வூர் ஆகிய மாநகராட்சிகளில் 5 சத வீத இடங்களை மட்டுமே காங்கிர ஸுக்கு ஒதுக்க திமுக முன்வந்திருப் பதாகக் கூறப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் கள் கடும் அதிருப்தி அடைந் துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் குறைந்தது 30 வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், 10 வார்டுகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக கூறிவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து தமிழக காங் கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன் (தென் சென்னை) ரங்கபாஷ்யம் (மத்திய சென்னை) ராயபுரம் மனோ (வட சென்னை) ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “சென்னை மாநக ராட்சியில் 200 வார்டுகள் உள்ள. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பகுதிகள் இதில் உள்ளன. எனவே, குறைந்தது 15 சதவீதம் இடங்களை யாவது கேட்டுப் பெற வேண்டும் என இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திருநாவுக்கரசரை கேட் டுக் கொண்டனர். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் பேசுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் சென்னை மாநகராட்சிக் குட்பட்ட தொகுதிகளில் திமுக பெரும் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் போட்டியிட்ட மயிலாப் பூர், ராயபுரம், அம்பத்தூர், மதுர வாயல் ஆகிய 4 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸுக்கு அதிக வார்டுகளை ஒதுக்க திமுக மாவட்டச் செயலாளர் களும், பகுதி செயலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களில் மட்டுமே காங்கிரஸுக்கு வாக்கு வங்கி உள்ளது. எனவே, இந்த மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 5 சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது” என்றார்.

திமுகவின் இந்த முடிவால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in