கணக்கில் காட்டாத வருமானத்தைத் தெரிவிக்க வருமானவரி அலுவலகத்தில் கவுன்ட்டர்கள்: நாளை நள்ளிரவு வரை சிறப்பு திறக்க ஏற்பாடு

கணக்கில் காட்டாத வருமானத்தைத் தெரிவிக்க வருமானவரி அலுவலகத்தில் கவுன்ட்டர்கள்: நாளை நள்ளிரவு வரை சிறப்பு திறக்க ஏற்பாடு
Updated on
1 min read

வருமானம் தெரிவிக்கும் திட்டத் தின் கீழ், கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களை தெரிவிக்க வசதியாக நாளை நள்ளிரவு வரை சென்னை நுங்கம் பாக்கம் வருமானவரி அலுவலகத் தில் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருமானம் தெரிவிக்கும் திட்டம்-2016-ன் படி, ஏற்கெனவே தங்களுடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிவிக்காதவர்களுக்கு தானாக முன்வந்து தெரிவிப்பதற்காக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை நள்ளிரவு வரை சென்னை வருமானவரி அலு வலகத்தில் சிறப்பு கவுன்ட்டர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வருமானம் தெரிவிக்கும் திட்டம்-2016, கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கி வரும் 30-ம் தேதி (நாளை) வரை அமலில் இருக்கும். அதற்குள் தெரிவித்தாக வேண்டும். மேற்கொண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. மேலும், இத்திட்டத்தின் கீழ் வருமானவரியை மூன்று தவணைகளில் செலுத்தலாம்.

இதன்படி, கட்டவேண்டிய மொத்த வரியில் 25 சதவீதத்தை வரும் நவம்பர் 30-ம் தேதிக் குள்ளும், 25 சதவீதத்தை 2017 மார்ச் 31-ம்தேதிக்குள்ளும், எஞ்சி யுள்ள 50 சதவீதத் தொகையை 2017 செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

மேலும், தாக்கல் செய்யப்படும் வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக் கொள்ளப் படும். அத்துடன், இதுகுறித்து வருமானவரித் துறையினர் எவ்வித விசாரணையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

அத்துடன் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் மற்றும் வருமானத்தை நேரடியாக தாக்கல் செய்வதற்கு வசதியாக சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் நாளை (30-ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆன்லைன் மூலமாகவும் நாளை நள்ளிரவு வரை தங்கள் கணக்கை தாக்கல் செய்யலாம். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in