ஆண்டிபட்டி அருகே வேலையிழப்பால் சலவை தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்க முடிவு

ஆண்டிபட்டி அருகே வேலையிழப்பால் சலவை தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்க முடிவு
Updated on
1 min read

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் நெசவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக சலவைத் தொழில் அதிகளவில் நடக்கிறது.

இங்குள்ள சலவைப் பட்டறை கழிவுநீரால் மாசு ஏற்படுகிறது என்று கூறி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மின்இணைப்பைத் துண்டித்தது. இதனால் சலவைத் தொழிலாளிகள் ஒரு மாதமாக வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பிச்சைமணி, நகரச் செயலாளர் முனீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வரும் 1-ம் தேதி முதல் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in