Last Updated : 30 Sep, 2016 08:57 AM

 

Published : 30 Sep 2016 08:57 AM
Last Updated : 30 Sep 2016 08:57 AM

மழைநீர் கால்வாயை தூர்வாராமல் கான்கிரீட் போட்டு மூடும் மாநகராட்சி: வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்

சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் முதல் ஜீவா ரயில் நிலையம் வரை ரயில் பாதை யோரம் உள்ள மழைநீர் கால் வாய் தூர்வாரப்படாமல் கான்கிரீட் தளம் அமைத்து மூடப் படுவதால் மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பூர் பேருந்து நிலையத் திலிருந்து வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வரை பெரம்பூர் நெடுஞ்சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடையே மழை நீர் வெளியேறுவதற்கான கால்வாய் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் இந்த கால்வாய் பல இடங்களில் திறந்து கிடக்கிறது. இப்பகுதிகளில் உள்ள உணவகங்கள், கடைகளின் திட, திரவ கழிவுகள் தினந்தோறும் இந்தக் கால்வாயில் கொட்டப்படுகின்றன. இதனால் இவற்றில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த பெருமழையின்போது இந்தப் பகுதியில் இடுப்பளவு நீர் தேங்கி நின்றது. சீனிவாசன் தெரு, ராமகிருஷ்ணன் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளானார்கள்.

இதனால் இந்த மழைநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்தக் கல்வாயை தூர்வாரி கான்கிரீட் தளம் அமைத்து மூடும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், முறைப்பாடி தூர்வாரி, கழிவுகளை அகற்றா மல் கான்கிரீட் தளத்தை மட்டும் அமைத்து கால்வாய்கள் மூடப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் தட்சிண ரயில்வே ஊழி யர்கள் சங்கத்தின் (டிஆர்இயூ) உதவித் தலைவர் ஆர். இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பெரம்பூர் நெடுஞ்சாலை ஓரம் உள்ள கால்வாய்தான் மழை நீர் வெளியேறுவதற்கான ஒரே வழியாக உள்ளது. இந்தக் கால்வாய் வழியாக மழை நீர் வெளியேறாததால்தான் கடந்த ஆண்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இப்போது கழிவுகளை அகற்றாமல் கால்வாயை கான் கிரீட் போட்டு மூடுகிறார்கள். இதனால் கடந்த ஆண்டைப் போல மழைக்காலத்தில் வீடுகளுக் குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் வெளியேறும் அளவுக்கு கால் வாயை தூர்வாரி அதன்பிறகு கான்கிரீட் தளம் அமைக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x