Published : 26 Jul 2022 07:46 AM
Last Updated : 26 Jul 2022 07:46 AM

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது இதுதொடர்பான அறிக்கையைதமிழக அரசு தாக்கல் செய்தது.அதில், தமிழக வனப்பகுதிகளில் யூக்கலிப்டஸ் உள்ளிட்ட 5 வகையான அந்நிய மரங்களின் எண்ணிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, அதை அகற்றகொள்கை முடிவு எடுத்து கடந்தஜூலை 13 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு, அந்நிய மரங்களை 10 ஆண்டுகளுக்குள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், “இந்த விஷயத்தில் தமிழக அரசு வெறும் அறிக்கைகளை மட்டுமேதாக்கல் செய்கிறது. ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. தமிழகவனப்பகுதிகளில் உள்ள அந்நியமரங்களை அகற்ற 10 ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது.

இந்தப் பணியை விரைவாக முடிக்க தனியாரிடம் கூட ஒப்படைக்கலாம். அந்நிய மரங்களை அகற்ற கொள்கை முடிவு எடுத்துள்ள தமிழக அரசு, யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நட வேண்டும், என கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழகத்தில் இனிமேல் யூக்கலிப்டஸ் மரங்களை யாரும் நடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை ஆக.16-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x