வெள்ளம் பாதித்த அடையாறு மண்டலத்தில் 12 வார்டுகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும்: அதிமுக பகுதிச் செயலாளர்களுக்கு மேலிடம் உத்தரவு

வெள்ளம் பாதித்த அடையாறு மண்டலத்தில் 12 வார்டுகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும்: அதிமுக பகுதிச் செயலாளர்களுக்கு மேலிடம் உத்தரவு
Updated on
1 min read

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகராட்சி மண்டலமான அடையாற்றில் உள்ள வார்டுகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டதன் பேரில் பகுதிச் செயலாளர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் கன மழை பெய்தது. அப்போது, நீர்நிலைகள் நிரம்பி நகரப்பகுதிக் குள்ளும் குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அப்போது, ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மாநகராட்சியிலேயே அடையாறு மண்டலம்தான் பெரிதும் பாதிக்கப் பட்டது. சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், திருவான்மியூர் பகுதிகளில் வெள்ளத் தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வெள்ளத்தின்போது ஆளுங்கட்சி யினர் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி அடுத்து நடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் எதிரொலித்தது. அடையாறு மண்டலத்தின் 90 சதவீத வார்டுகளை உள்ளடக்கிய வேளச்சேரி, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆனார்கள்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அடையாறு மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளிலும் அதிமுகவினரே வெற்றி பெற்றனர். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து தற்போது 12 பேரில் என்.எஸ்.மோகன், சரவணன், எம்.எம்.பாபு, பார்வதி ஜோதி ஆகிய 4 பேருக்கு மட்டுமே அதிமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கியது.

மீதமுள்ள 8 வார்டுகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளையும் மீண்டும் அதிமுக வசமாக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டதன் பேரில், அதிமுக பகுதிச் செயலாளர்கள் வேட்பாளர்களை விடவும் கடினமாக உழைத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in