கோவையிலிருந்து ஹைதராபாத்துக்கு சிறப்பு விமான சுற்றுலா

கோவையிலிருந்து ஹைதராபாத்துக்கு சிறப்பு விமான சுற்றுலா
Updated on
1 min read

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் செப்டம்பர் 2-ம் தேதி கோவையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்தச் சுற்றுலாவில் ஹைதராபாத் நகரத்தின் வரலாற்றைச் சிறப்பிக்கும் கோல்கொண்டா கோட்டை, சார்மினார், மெக்கா மஸ்ஜித், சாலர்ஜங் அருங்காட்சியகம், லும்பினி தோட்டம், ஒற்றுமையின் சிலையான ஸ்ரீ ராமானுஜர் சிலை, ராமோஜி சினிமா நகரம் ஆகிய இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 நாட்கள் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு கட்டணமாக ரூ.14,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சென்றுவருவதற்கான விமானக் கட்டணம், ஏசி ஹோட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகனம் மூலம் சுற்றிப்பார்க்கும் வசதி, சுற்றுலா வழிகாட்டி, உணவு ஆகியவை அடங்கும்.

இந்தச் சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசியின் கோவை அலுவலகத்தை 90031 40655, 82879 32114 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in