Last Updated : 29 Sep, 2016 09:27 AM

 

Published : 29 Sep 2016 09:27 AM
Last Updated : 29 Sep 2016 09:27 AM

விழுப்புரம்: ஊராட்சி தலைவர் பதவி ரூ.1.19 கோடிக்கு ஏலம்?

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக் கப்பட்டு தேர்தல் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் கிராமத்தார் முன்னிலையில் பதவிகள் ஏலம் விடப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் காஞ்சிபுரம் மாவட் டம், உத்திரமேரூரில் ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் போனதாக பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட விலை பேசும் சம்பவங்களும் நடை பெறுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 2,500 வாக்காளர்களைக் கொண்ட நீலமங்கலம் ஊராட்சியில் தலை வரை போட்டியின்றி தேர்வு செய்ய கிராம முக்கியப் பிரமுகர்கள் முடிவு செய்து, நேற்று ஏலம் விட முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று காலை ஊராட்சியில் திரண்ட மக்கள் முன்பு தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு தொடக்க ஏலத் தொகை யாக ரூ.1 கோடி நிர்ணயிக் கப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரூ.1 கோடியே 19 லட்சம் ரூபாய் ஏலம் கேட்டுள்ளார். இதன் மூலம் திமுகவைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி அவைத் தலைவர் ராமச்சந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தொடர்ந்து துணைத் தலைவர் பதவியும் ஏலம்விட தயாரான போது, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏலம் விடப்படவில்லை. இதையடுத்து நேற்று இரவு மீண்டும் கூட்டம் கூடி சமரச முயற்சிகள் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள விளம் பாவூர் ஊராட்சித் தலைவர் பதவி ரூ.19 லட்சத்துக்கும், உளுந்தூர் பேட்டை ஒன்றியத்தில் உள்ள நெடுமனூர் ஊராட்சித் தலைவர் பதவி ரூ.7 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்ரமணியனிடம் கேட்டபோது, “ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் கிராமப் பஞ்சாயத்துகளில் தலைவர் பதவி ஏலம் விடப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிக்க உத்தர விட்டுள்ளோம்” என்றார்.

தேர்தல் அலுவலரும், கள்ளக் குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலருமான கல்யாணசுந்தரத் திடம் கேட்டபோது, “ஊராட்சித் தலைவர் ஏலம் தொடர்பாக தகவல் வந்ததைத் தொடர்ந்து அந்த கிராமத்துக்குச் சென்று பார்வையிட்டோம். அப்போது கிராம முக்கியஸ்தர்கள் ஏலம் விடப்படவில்லை என கூறி கலைந்து சென்றுவிட்டனர்” என்றார்.

கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களிலும் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங் களில் ஊராட்சி, பேரூராட்சித் தலைவர், கவுன்சிலர் பதவிகள் ஏலம் விடப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x