தமிழக உள்ளாட்சித் தேர்தல்: 4-ம் நாளில் 22,469 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: 4-ம் நாளில் 22,469 பேர் வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

தமிழக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய 4-வது நாளான நேற்று மட்டும் 22 ஆயிரத்து 469 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 4 நாட்களில் 65 ஆயிரத்து 376 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக் கான நேரடி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது.

முதல் நாளில் 4 ஆயிரத்து 748 பேரும், 2-ம் நாளில் 6 ஆயிரத்து 433 பேரும், 3-ம் நாளில் 31 ஆயிரத்து 726 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 4-ம் நாளான நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 68, ஒன்றிய கவுன்சில் வார்டு உறுப்பினருக்கு 513, கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 3 ஆயிரத்து 152, கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 17 ஆயிரத்து 606 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

நகர்ப்புறத்தில், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 187 பேர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 264 மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 679 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 469 பேர் மனுத்தாக்கல் செய்துள் ளனர்.

கடந்த 4 நாட்களில் இதுவரை மொத்தம் 65 ஆயிரத்து 376 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in