Published : 25 Jul 2022 03:47 PM
Last Updated : 25 Jul 2022 03:47 PM

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்: ஓபிஎஸ் அறிவிப்பு

ஓபிஎஸ், இபிஎஸ் | கோப்புப் படங்கள்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கியும், புதிதாக நியமித்து வருகிறன்றனர்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமனம் செய்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரை நியமித்தும் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x