Published : 25 Jul 2022 06:26 AM
Last Updated : 25 Jul 2022 06:26 AM

தமிழ்நாடு கல்வி ‘பெல்லோஷிப் ' திட்டம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடிக் கல்வி,எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதுநிலை உறுப்பினர் (senior fellow), உறுப்பினர் (fellow) என 2 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை உறுப்பினர் பதவிக்கு 38 பணியிடங்களும், உறுப்பினர் பதவிக்கு 114 பணியிடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை 15-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூலை31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள பட்டதாரிகள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற வலைதளம் வழியே உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணிக்காலம் 2 ஆண்டுகளாகும். முதுநிலை உறுப்பினருக்கு ரூ.45,000, உறுப்பினருக்கு ரூ.32,000 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்தப் பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், முழுமையாக பணியைமுடிப்பவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை tnschools.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x