Last Updated : 24 Jul, 2022 09:10 AM

 

Published : 24 Jul 2022 09:10 AM
Last Updated : 24 Jul 2022 09:10 AM

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள்: குண்டும், குழியுமான சாலையால் திணறும் வாகன ஓட்டுநர்கள்

குண்டும், குழியுமாக காணப்படும் தாணிப்பாறை சாலை

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், தாணிப்பாறை செல்லும் வழியில் குண்டும், குழியமான சாலையை சீரமைக்காததால் பக்தர்களும், வாகன ஓட்டுநர்களும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாவுக்கு, பக்தர்கள் அனுமதி அளிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

இதையொட்டி நாளை (25-ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை யொட்டி, கோயில் வளாகத்திலும் அடிவாரப் பகுதியான தாணிப் பாறையிலும் பாதுகாப்பு ஏற் பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆடி அமாவாசை திருவிழாவின்போது சுமார் 1.50 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதோடு, ஆயிரக்கணக்கான தனியார் வாகனங்களும் வந்து செல்லும் வகையில் தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாணிப்பாறை சாலையில் காட்டாற்றின் குறுக்கே புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட் டுள்ளது. ஆனால், பாலத்தின் இரு பகுதிகளிலும் தார் சாலை அமைக்காமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது

அதோடு, பாலத்தின் உயரம் அதிகமாக உள்ளதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்றுவர சிரமமாக உள்ளதா கவும், வாகனங்களை ஓட்ட முடியவில்லை என இருசக்கர வாகனத்தில் செல்வோரும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, ஆடி அமாவாசை திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், பழுதடைந்துள்ள சாலையை வருங் காலத்திலாவது நிரந்தரமாகச் சீரமைக்க வேண்டும் என்றும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைப்பதோடு, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ள சாலையில் இருபுறமும் தார் சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x