

பொள்ளாச்சி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர். மற்றொரு விபத்தில் புதுச்சேரி அருகே 3 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த டி.கோட்டாம் பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் நடராஜ்(70). வெங்காயக் கமிஷன் மண்டி நடத்தி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி(42) என்ற மகள், திருமுருகன்(40) என்ற மகன் உள்ளனர்.
மகன் திருமுருகன், மருமகள் பிரியா(35), பேரன் தர்சன்(9), பேத்தி சாகித்யா(12), மகள் ஜெயலட்சுமி, மருமகன் ஆனந்தகிருஷ்ணன்(45), அவரது மகள் நிதி(10) ஆகியோருடன் நடராஜ் கடந்த 26-ம் தேதி ராமேசுவரம், திருச் செந்தூருக்கு காரில் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி திரும்பினர். காரை ஆனந்தகிருஷ்ணன் ஓட்டி வந்தார்.
பொள்ளாச்சி ஆழியாறு நெல்லித்துறைமன்னம் பகுதி யைச் சேர்ந்த நாகப்பன்(38) மங்க ளுருவில் இருந்து உடுமலைக்கு சாக்கு பாரம் ஏற்றிய லாரியை ஓட்டி வந்துள்ளார். லாரியை உடுமலை பொள்ளாச்சி சாலை யில், காஸ்மோ நகர் பகுதியில் நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். நடராஜ் குடும்பத் தினர் வந்த கார், நின்றிருந்த இந்த லாரி மீது நேற்று அதிகாலை 4.40 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆனந்தகிருஷ்ணன், நடராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருமுருகன், ஜெயலட்சுமி, நிதி பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தனர். விபத் தில் படுகாயமடைந்த பிரியா, தர்ஷன், சிறுமி சாகித்யா ஆகிய 3 பேர் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். காரை ஓட்டி வந்த ஆனந்த கிருஷ்ணன், அயர்ந்ததால், விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ மாணவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூரைச் சேர்ந்தவர் சித்த வைத்தியர் தங்கம் என்பவரது மகன் தங்கக்குமரன்(22). சென்னை பொன்னியம்மன்மேடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் மகன் அரவிந்த்குமார். சென்னை கோட்டூர் அனந்தராமன் மகன் ஹரிபிரசாத். வேலூர் மாவட்டம், காட்டுக்குடி பாரதி தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுந்தரம் மகன் பாலகிருஷ்ணன்.
இவர்கள் 4 பேரும் புதுச்சேரி அடுத்துள்ள கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில் 4 பேரும் பங்கேற்று விட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்றுகொண்டு இருந்தனர்.
புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பொம்மையார் பாளையம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து புதுச் சேரி நோக்கி இரும்பு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் காரில் பயணம் செய்த தங்கக் குமரன், அரவிந்த்குமார், ஹரி பிரசாத் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். பாலகிருஷ்ணன் படுகாய மடைந்தார். லாரியின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். பாலகிருஷ்ணனை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.