

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிக்க ஐஜேகே சார்பில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதி களில் நடைபெறவுள்ளன. இத்தேர் தலில் ஐஜேகே போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் எந்தந்த இடங் களுக்கு யார் யார் போட்டியிடு வது என்பது தொடர்பான பணி களை மாவட்ட ஒன்றிய, நகர நிர் வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்பேரில், வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகளும் தொடங்க உள்ளன.
இப்பணியினை ஒருங் கிணைக்கவும், வாக்கு சேகரித் தல், பிரச்சாரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை முறைப் படுத்தவும் மாவட்ட வாரியாக 20 பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் அனை வரும் கட்சியின் பொதுச்செயலா ளர் பி.ஜெயசீலனின் ஆலோசனை யின்படி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஐஜேகே கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் தேர்தல் ஒருங்கிணைப்பாளராகவும், தேர் தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆரோக்யம் வேட்பு மனு தாக்கல் மற்றும் சட்ட ஆலோச னைகளையும் வழங்குவார்.