Published : 23 Jul 2022 06:53 AM
Last Updated : 23 Jul 2022 06:53 AM

ராமநாதபுரம் | கலவரம் நடந்த பள்ளி மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு

ராமநாதபுரம்: வன்முறைச் சம்பவத்தால் சேதமடைந்த சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அருகில் உள்ள பிற பள்ளிகளில் வைத்து வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தி\யாளர்களிடம் கூறியதாவது:

சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறைச்சம்பவத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தபள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அருகிலுள்ள அரசு, தனியார் பள்ளிகள்மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை வசதிகள் தேவை என்பதை ஆய்வு செய்துள்ளோம். இதற்காக இந்த ஆண்டு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்படும். அதில் முதல்கட்டமாக ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் மாணவர்களுக்கு கல்விகற்பிக்கப்படும் 2,500 பள்ளிகளில், விரைவில் கட்டிடங்கள் கட்டித் தரப்படும். பழுதடைந்த 10,031 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 60 சதவீதமாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x