Published : 09 May 2016 08:48 AM
Last Updated : 09 May 2016 08:48 AM

வாக்காளர் உறுதிமொழி ஏற்பில் 10 லட்சம் பேர் பங்கேற்பு: சென்னையில் ஏற்பாடு

சென்னையில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மே 16-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்ற இலக்கை அடைய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளை (மே 10) காலை 10 மணிக்கு, அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்கள், உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள், இதர தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் பொதுமக்கள் “கட்டாயமாக 100 சதவீதம் வாக்களிப்போம், அதற்கு பணம் வாங்க மாட்டோம்” என உறுதிமொழி எடுக்க தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி நாளை காலை 10 மணிக்கு, சென்னை மாவட்டத்தில் உள்ள 10 லட்சம் பேர், அவரவர் நிறுவனங்களில் இருந்தவாறு உறுதிமொழி ஏற்க உள்ளனர்.

வாட்ஸ்-அப் மூலமாக

அந்நிகழ்வின் படங்கள், உறுதிமொழி ஏற்றவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை 9445190997, 9445190473, 9884534765 ஆகிய எண்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ dceducation@chennaicorporation.gov.in என்ற இமெயில் முகவரிக்கோ அனுப்பலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x