Published : 23 Jul 2022 06:00 AM
Last Updated : 23 Jul 2022 06:00 AM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வில் 34,378 பேர் பங்கேற் கவுள்ளனர். இதற்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு நாளை (24-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு கூட்டம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலக பிரிவு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 34 ஆயிரத்து 378 பேர் எழுதவுள்ளனர். இதற் காக 99 தேர்வுக்கூடங்களில் 117 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன.
ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு ஆய்வு அலுவலர் என மொத்தம் 117 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு முறைகேட்டை கண் காணிக்க 7 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங் களுக்கு தடையில்லாத மின்சாரம், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT