Published : 18 May 2016 08:53 AM
Last Updated : 18 May 2016 08:53 AM

சென்னை மாவட்டத்தில் முதல் 3 இடங்களையும் கைப்பற்றிய மாணவிகள்

பிளஸ் 2 தேர்வில் சென்னை மாவட்டத்தில் முதல் 3 இடங்களை யும் மாணவிகளே கைப்பற்றி யுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் 410 பள்ளிகளில் இருந்து 50 ஆயிரத்து 840 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இவர்களில் 46 ஆயிரத்து 678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.81 சதவீதம் ஆகும்.

சென்னை கே.கே.நகர் ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.ஸ்ரீலேகா 1200-க்கு 1,188 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். எஸ்ஆர்பி காலனி ஜெயகோபால் கரோடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.லாவண்யா 1,185 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், பெரம்பூர் கலிகி ரங்கநாதன் மாண்ட்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.கிறிஸ்டினா ஜூலி 1,184 மார்க் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

தேர்ச்சி விகித அடிப்படையில் அரசு பள்ளிகளில் சூளைமேடு ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் (97.4 சதவீதம்), விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும் (95.6 சதவீதம்), வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் (94.82 சதவீதம்) பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x