நாகர்கோவிலில் இன்று ராகுல்காந்தி பிரச்சாரம்

நாகர்கோவிலில் இன்று ராகுல்காந்தி பிரச்சாரம்
Updated on
1 min read

நாகர்கோவிலில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார்.

டெல்லியில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து கார் மூலம் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் வருகிறார். இங்குள்ள கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.

முதலில் நாகர்கோவில் நாகராஜா கோயில் திடல் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. டெல்லியில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், இந்த இடத்தை நிராகரித்தனர். இதனால் மேடை பணிகள் நிறுத்தப்பட்டன. வேறு இடத்தை தேர்வு செய்வது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்படி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள கன்கார்டியா பள்ளி மைதானம் தேர்வு செய்யப்பட்டது. டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி தர்மராஜன் மற்றும் போலீஸார் அங்கு நேற்று காலை ஆய்வு செய்தனர். அவர்கள் ஒப்புதல் அளித்தபின், மேடை அமைக்கும் பணி வேகமாக தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in