

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று விடுத்த அறிக்கை: பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீதும் ஜிஎஸ்டியை உயர்த்தி இருப்பது ஏற்புடையது அல்ல. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தலின்படி, தேமுதிக சார்பில் ஜூலை 27-ம் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
மதுரையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையிலும், மற்ற மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.