

தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றிபெற்று 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கும் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 1984-க்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது தற்போததான் நிகழ்ந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இனிவரும் 5 ஆண்டு காலமும் தொடர்ந்து தமிழினத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் தனது பயணத்தை தொடர வேண்டும் என்பது தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பு ஆகும்.தமிழினத்தின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.