Published : 22 Jul 2022 06:15 AM
Last Updated : 22 Jul 2022 06:15 AM

ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது: கலைஞர் நினைவு சர்வதேச மார்த்தான் போட்டி

கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், மாரத்தான் வீரருமான அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென வருகை புரிந்து முன்பதிவு பணிகளைப் பார்வையிட்டார்.

சென்னை: கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டி 3-வது ஆண்டாகசென்னையில் வரும் ஆகஸ்ட் 7-ம்தேதி நடைபெறவுள்ளது. இதில்பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொர் ஆண்டும் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. முழு மார்த்தான் போட்டி, அரை மாத்தான் போட்டி, 10 கி.மீ. போட்டி, 5 கி.மீ. போட்டி என4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

கருணாநிதி நினைவு மண்டபம் எதிரிலிருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும். முன்பதிவு செய்ய விரும்புவர்கள் www.kalaignarmarathon.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வரும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான அமர்ஜித்சிங் சாவ்லா இப்போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளார். அவர் தன்னைப்போல் பலரும் இப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு மாரத்தான்போட்டிக்காக வசூலிக்கப்படும் முன்பதிவு கட்டணம் முழுவதும் ஏழைமை நிலையில் உள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x