சேலம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: மாணவர் உட்பட 4 பேர் பலி

சேலம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: மாணவர் உட்பட 4 பேர் பலி
Updated on
1 min read

சேலம் அருகே பட்டாசு தொழிற் சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் உட்பட 4 பேர் உயிரிழந் தனர். இருவர் படுகாயம் அடைந்த னர். இதை கண்டித்து கிராம மக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம் இளம் பிள்ளை சின்னப்பம்பட்டி அடுத்த எலம்பக்கவுண்டனூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இங்கு நாட்டு வெடிகள் தயார் செய்து வருவதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு பட்டாசு தொழிற்சாலையில் தொழி லாளர்கள் வெள்ளச்சி, அஜித் குமார், அலமேலு, கவிதா, ராஜா மற்றும் மணிகண்டனின் மனைவி பிரியா ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இதில், பிரியா, ராஜா, வெள்ளச்சி ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த னர். அஜித்குமார், அலமேலு மற்றும் கவிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர் களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, வழியில் அஜித்குமார் உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், அஜித்குமார் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ள நிலையில் பள்ளி விடுமுறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

நேற்று காலை எலம்பகவுண் டனுர் கிராம மக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். விபத்துக்குள்ளான பட்டாசு தொழிற்சாலையை மூட வும், கிராம பகுதிகளில் பட்டாசு ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயன்றனர். அப்போது, பாது காப்புப் பணியில் இருந்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.

ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு, நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தோடு, ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் செய்ய முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உறுதி

பின்னர் போலீஸார் கிராம மக்களை அமைதிப்படுத்தி, 5 பேர் மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதி அளித்தனர். ஆட்சியரை சந்தித்த கிராம மக்கள், ‘‘பட்டாசு தொழிற்சாலைகள் கிராமங்களில் நடத்த அனுமதிக்க கூடாது. தற்போது செயல்பட்டு வரும் 10 பட்டாசு தொழிற்சாலைகளையும் மூட வேண்டும்’’ என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கார்த்திகேயன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in