

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளை அதிமுக வென்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு 28 பேர் அடங்கிய அமைச்சர்கள் பட்டியலில், திருவள்ளூர் மாவட் டத்துக்கு உட்பட்ட மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்ற பா.பெஞ்சமின் பெயர் இடம் பெற் றுள்ளது. அவருக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொல்லி யல், இளைஞர் நலன், விளை யாட்டு ஆகிய துறைகள் ஒதுக் கப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல்ரஹீம் ஆகிய 3 பேர் அமைச்சர்களாக இருந்த நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற உள்ளார். இது திருவள்ளூர் மாவட்ட அதிமுகவினரை சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட அதிமுகவினர் தெரிவித் ததாவது: மழை, வெள்ளப் பாதிப் புகள் ஏற்பட்ட நிலையிலும் 7 தொகுதிகளை அதிமுக கைப் பற்றியுள்ளது. அதற்கு, கட்சியி னரின் கடுமையான உழைப்புதான் காரணம். இந்த உழைப்புக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த முறையும் 3 பேரை அமைச்சர்களாக எதிர்பார்த்தோம். ஆனால் அமைச்சரவையில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம் மட்டுமே தரப்பட்டுள்ளது எங்களுக்கு பெரிய ஏமாற்றமே என்று அவர்கள் தெரிவித்தனர்.