

சென்னை: சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கட்டிடக் கழிவுகளை கொட்ட வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை 15 மண்டலங்களில், அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். அதன் விவரம்:
மீறினால் அபராதம்
இந்த இடங்களை தவிர்த்து வேறு இடங்களில் கொட்டுபவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் படி விதிக்கப்படும். 1 டன் அளவிற்கு குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000-ம், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000-ம் அபராதம் விதிக்கப்படும்.
20 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை உருவாக்குபவர்கள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மறு பயன்பாட்டு மையங்களுக்கு கட்டிடக் கழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கட்டிடக் கழிவுகளை அனுப்புவதற்கு முன் உரிய கட்டணத்தை சென்னை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்திய பிறகு கட்டிடக் கழிவுகள் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.