திருப்பூர் | குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீட்டுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

திருப்பூர்: பல்லடம் அருகே பெண் ஊராட்சி தலைவரின் கணவர் தலையீடு காரணமாக, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அதனை ஊராட்சி செயலர் மற்றும் வட்ட வளர்ச்சி அலுவலரின் மாத சம்பளத்தில் வசூலிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரம் சாமிகவுண்டன்பாளையம் உப்புத்தோட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டவர். இந்நிலையில் புஷ்பதால் தன் வீட்டு குடிநீர் இணைப்புகான குடிநீர் வரி ரூ.4,920 நிலுவை வைத்துள்ளார். இதையடுத்து புஷ்பலதா வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன்பின்னர் தண்ணீர் வரி செலுத்திய பின்னரும், குடிநீர் இணைப்பு வழங்காமல் இழுத்தடித்துள்ளனர்.

இதையடுத்து செம்மிபாளையம் ஊராட்சி தலைவர் கணவரின் தலையீடு காரணமாக, அவருக்கு இணைப்பு வழங்கவில்லை என மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் ஒழுங்கு நடவடிக்கையாக, ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்தத் தொகையை, செம்மிபாளையம் ஊராட்சி செயலர் சுரேஷ்குமார் மற்றும் பல்லடம் வட்ட வளர்ச்சி அலுவலர் வில்சன் ஆகியோரின் சம்பளத்தில் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை வசூலித்து கொள்ளவும் அறிவுறுத்தியது.

தொடர்ந்து பெண் ஊராட்சி தலைவர்கள் உள்ள பகுதிகளில் கணவரின் தலையீடு புகார்கள் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in